புளூவேல் கேம்: தானாக முன்வந்து விசாரணையை தொடங்கிய ஐகோர்ட்
- IndiaGlitz, [Friday,September 01 2017]
உலகையே ஆட்டிப்படைத்து வரும் புளுவேல் கேமினால் தற்கொலை செய்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் ஆட்சியை காப்பாற்றவே அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லாதபோது மக்களின் பிரச்சனைகளை கவனிக்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கும். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் புளூவேல் கேம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை செய்ய முன்வந்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை வரும் 4ஆம் தேதி நடைபெறும் என தெரிகிறது.
இந்த நிலையில் கோவையில் புளூவேல் விளையாட்டால் கையை அறுத்துக்கொண்ட 10-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு காவல்துறையினர் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். நேற்று மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்னொரு உயிர் இழப்பு ஏற்படுவதற்குள் இந்த கேம் தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.