கேரவனில் ரகசிய கேமரா.. நடிகைகள் உடை மாற்றும் வீடியோ.. அதிர்ச்சி தகவல் அளித்த ராதிகா..!

  • IndiaGlitz, [Saturday,August 31 2024]

கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை கேரள சினிமா உலகினர் பார்த்தனர் நடிகை ராதிகா அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்த நிலையில் இது குறித்து கேரளா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பாலியல் ரீதியாக நடிகைகளுக்கு தொல்லை ஏற்படுவது உண்டு என்றும் ஒரு முறை மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது ஆண்கள் கூட்டமாக போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த போது நான் தற்செயலாக அதை பார்த்த போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடைமாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகை ராதிகா கூறியுள்ளார்.

அதன் பிறகு நான் கேரவனில் உடை மாற்றாமல் ஹோட்டல் அறைக்கு சென்று தான் உடை மாற்றினேன் என்றும் இது குறித்து மற்ற நடிகைகளுக்கும் எச்சரிக்கை விடுத்தேன் என்றும் அவர் தெரிவித்தார். இது எந்த படப்பிடிப்பில் நடந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் சினிமா சிஸ்டமே இங்கே தவறாக இருக்கிறது’ என்று நடிகை ராதிகா கூறிய அதிர்ச்சி தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

ப்ரியா அட்லி தொடங்கியுள்ள புதிய தொழில் இதுதான்.. நெகிழ்ச்சியான பதிவு..!

கடந்த சில நாட்களுக்கு முன் ப்ரியா அட்லி ஒரு புதிய தொழிலை தொடங்க இருப்பதாகவும் அது குறித்த இணையதளத்தையும் வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருந்த நிலையில்

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்.. டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ..!

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வீடியோ

குறி வச்சா இரை விழனும்: 'வேட்டையன்' ரஜினியின் டப்பிங் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக

தற்காப்பு கலை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்.. 'கூலி' படத்திற்காக எடுத்த புதிய முயற்சி..!

உடற்தகுதியை நேர்த்தியாக பராமரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக அறியப்படும் நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்..

எதிர்பார்ப்புகளைத் தாண்டி எகிற வைக்கும் GOAT...

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பளார் T. சிவா. அம்மா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டவர். நடிகராவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர்.