முத்தத்தில் எத்தனை வகை: இயக்குனருக்கு சொல்லி கொடுத்த நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘உற்றான்’. ரோஷன், ஹரிரோஷினி நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
இப்படத்தில் ஹீரோ ரோஷன், ஹீரோயின் ஹரிரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை இயக்குனர் ஓ. ராஜாகஜினி படமாக்கினார். இயக்குனர் கட் சொல்லி முடித்ததும் ஹீரோயின் கோபத்துடன் இயக்குனரிடம் வந்து ’நீங்கள் கதை சொல்லும் போது லிப் லாக் முத்தம் என்றுதான் சொன்னீர்கள். அதனால்தான் சம்மதித்தேன். ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார். என்று கூற, இயக்குனர் ஒன்றுமே புரியவில்லை என்றதும் ’லிப்லாக் என்றால் உதட்டில் முத்தம் கொடுப்பது ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என்று விளக்கமாக முத்தவகை குறித்து இயக்குனருக்கு நடிகை ஹரிரோஷினி விளக்கினார்.
அதன்பின்னர் முத்த வகையை இயக்குனரும் நாயகனும் புரிந்து கொண்டபின் அதே காட்சி மீண்டும் படமாக்கப்பட்டதாகவும், இந்த முறையும் ஹீரோ, ஹீரோயினியின் உதட்டை கடிக்க கோபமான ஹீரோயின், கேரவன் வண்டிக்குள் கோபத்துடன் சென்றுவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
ரோஷன், ஹரிரோஷினி, பிரியங்கா வேல.ராமமூர்த்தி, மதுசூதனராவ், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments