அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையான வேகம் காட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்கள் நடிக்கும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் அந்த லுக்கின் போஸ்டர்களை அடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக நடைபெற்று வருகிறது
அஜித், விஜய் ரசிகர்களின் இந்த வேகம் பெரும் ஆச்சரியத்தை அளித்து வரும் நிலையில், அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையாக தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் வேகம் காட்டி வருகின்றனர். இன்று மாலை 5 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தின் டைட்டில் லுக் வெளியானது
இந்த லுக் வெளியான ஒரு சில நிமிடங்களில் இந்த லுக்கின் போஸ்டரை அடித்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும் 'ஹீரோ' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாகவும் அனைத்து தரப்பினர்களையும் இந்த போஸ்டர் கவர்ந்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்
'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா , விவேக், யோகிபாபு, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தின் அடுத்தடுத்த புரமோஷன்களான ஃபர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் என தெரிகிறது. இந்த படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது
#HERO Title release Ku banner adichi pattaya kilapiruvom ????#NellaiSKFC ??@Siva_Kartikeyan anna ❤#HeroReleaseDate #HeroTitleDesign#HeroFromDec20@AnandSkfc@navneth @vimalraj9524 @SkBloodSrini @Itz__Mersalsiva pic.twitter.com/cGedT5gFxp
— CL Balaji (@clbalajiskfc) July 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com