சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' குறித்த முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 23 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ‘ஹீரோ’ படம் குறித்து ‘ரியாலிட்டி கேம்’ ஒன்றை படக்குழுவினர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். நாளை மாலை 5 மணிக்கு ‘ஹீரோ’ ரியாலிட்டி கேம் வெளியிடப்படும் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த கேம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

காளை மாட்டின் மீதேறி டிக்டாக் எடுக்க முயன்ற வாலிபர் பரிதாப பலி!

கோவை அருகே குட்டையில் இருந்த காளை மாட்டின் மீது ஏறி டிக்டாக் வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் ஒருவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ் நடிகருக்கு இதுதான் முதல்: தளபதி விஜய்க்கு கிடைத்த பெருமை

கன்னியாகுமரியில் உள்ள மியூசியத்தில் விஜய்யின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. உலக, இந்திய, மற்றும் திரையுலக பிரமுகர்களின் பல மெழுகுச்சிலைகள்

யாராவது என் பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கோங்க: திருமண மண்டபத்தில் கெஞ்சிய தந்தை!

கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென திருமணம் நின்றதால், அந்த பெண்ணின் தந்தை கல்யாண மண்டபத்தில்

'தர்பார்' படத்திற்காக அனிருத்தின் சரவெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில்

கமல்-ரஜினியுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமா? அமைச்சரின் அதிரடி பேட்டி

கடந்த சில நாட்களாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாகவும்