தனது கழிவறைக்கு காவல் வைத்த அதிபர்… தவறினால் மரணத் தண்டனையா?
- IndiaGlitz, [Tuesday,February 01 2022]
மர்மத்திற்குப் பஞ்சம் இல்லாத வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சமீபத்தில் எங்கு சென்றால் கையடக்க கழிவறையை எடுத்துச் செல்வதாக பிரபல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் ஒருவேளை தவறாக அந்த அறையில் யாரேனும் நுழைந்துவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் எனும் தகவல் தற்போது பலரையும் அதிருப்தியடைய செய்திருக்கிறது.
வடகொரியாவில் உணவு, உடை, பொழுதுபோக்கு என அனைத்து விஷயங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. காரணம் மேலைக் கலாச்சாரம் தனது நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் அதிபர் கிம் உறுதியாக இருக்கிறார். ஒருவேளை அவருக்கு பழைய விஷயங்களில் ஆர்வம் இருப்பதினால் இப்படி செய்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் இறந்துபோன தலைவர்களுக்காக நாள் கணக்கில் நாட்டு மக்களை அழச் சொல்லுவது, அவர்களை கடவுளாக வழிபடச் சொல்லுவது என அந்நாட்டின் விதிமுறைகள் அனைத்துமே தாறுமாறாகத்தான் இருந்துவருகின்றன.
இந்நிலையில் அதிபர் கிம் கடுமையான உடல்நலப் பாதிப்பில் இருந்துவருகிறார் என்ற தகவலும் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து தற்போது அதிபர் கிம் எந்த இடத்திற்கு சென்றாலும் தன்னுடைய கையடக்க கழிப்பறையை அவர் கொண்டு செல்கிறார் எனும் தகவலை தென் கொரிய ஊடகமான தி சோசுனில்போ ஆதாரத்துடன் கூறியிருக்கிறது. இதே செய்தியை அமெரிக்க ஊடகங்களும் பேசிவருகின்றன. இந்தத் தகவல் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து தன்னுடைய உடல்நலம் சார்ந்த விஷயங்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காக அதிபர் கிம் இப்படி செய்கிறார் என்றும் தனது கழிவறைக்கு அவர் 24 மணிநேரமும் காவல் வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றன. அதோடு கழிவறைக்குள் தவறுதலாக யாரேனும் நுழைந்துவிட்டால் அந்த நபருக்கு மரணதத்தண்டனை விதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.