கோழி ரத்தத்தை ஊசி மூலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்… பகீர் சம்பவம்!
- IndiaGlitz, [Tuesday,September 14 2021]
சீனாவில் உள்ள பல நகரங்களில் “சிக்கன் பேரண்டிங்(Chicken Parenting)“ எனும் நிபுணத்துவம் வாய்ந்த குழந்தை வளர்ப்பு முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இதற்காக குழந்தைகளுக்கு கோழிகளின் ரத்தத்தை பெரும்பாலான பெற்றோர்கள் ஊசிகள் மூலம் செலுத்தி வருகின்றனர். இப்படி செய்வதன் மூலம் தங்களுடைய குழந்தைகள் “சூப்பர் கிட்டாக“ வளரும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு இருக்கிறது.
சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்கோ போன்ற நகரங்களில் இந்த சிக்கன் பேரண்டிங் குழந்தை வளர்ப்பு முறை அதுவும் நடுத்தர குடும்பங்களில் அதிகரித்து விட்டதாம். சாதாரண குழந்தைகளை விட ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த கோழி ரத்தம் செலுத்துவதால் உயர் செயல்திறன் கொண்ட குழந்தைகளாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்து வருகிறது.
குழந்தையின் வளர்ச்சி, கல்வி, விளையாட்டு போன்ற பல்வற்றிற்கு இந்த கோழி ரத்தம் அவர்களுக்கு உதவும் என்றும் நம்புகிறார்கள். இதுகுறித்து supchina.com எனும் இணையத்தளம் விரிவான தகவல்களை நமக்கு அளிக்கிறது. மேலும் குழந்தை வளர்ந்த பிறகு கருவுறாமை, புற்றுநோய், வழுக்கை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் இந்த கோழி ரத்தம் அவர்களைக் காப்பாற்றும் என்றும் அந்த மக்கள் நம்புகின்றனர்.
சீனாவில் சமீபகாலமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் மனஅழுத்தக் குறைபாடு அதிகரித்து விட்டதாக சிங்கப்பூர் போஸ்டின் பத்திரிக்கை தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தக் குறைபாடுகளை எதிர்கொள்ளவே பெரும்பாலான பெற்றோர்கள் தற்போது கோழி ரத்தம் செலுத்தும் பரிசோதனையில் இறங்கி உள்ளனர்.
அமெரிக்காவில் “ஹெலிகாப்டர் பேரண்டிங்“ எனும் பழக்கம் ரொம்பவே பிரபலம். அதாவது எவ்வளவுதான் குழந்தைகள் நல்ல திறமை மற்றும் திடமான உடல்நிலையை கொண்டிருந்தாலும் அந்தப் பெற்றோர்களுக்கு அதில் முழு திருப்தியே இருக்காதாம். இதற்காக குழந்தைகளை வெவ்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்து பாடாய் படுத்துவார்களாம்.
அந்த வகையில் தற்போது சீனாவில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செயல்திறன் வாய்ந்தவர்களாக வளர்க்க வேண்டி இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.