ஆஸ்கார் இல்லாவிட்டால் என்ன? அள்ளி அள்ளி வழங்கப்பட்ட பரிசுகளால் திணறிய நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது என்பதும் விருதுகளை பெற்ற நட்சத்திரங்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என்பதும் தெரிந்ததே. ஆனால் விருது பெறாத நட்சத்திரங்களும், பார்வையாளர்களாக கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கும் இந்த விழாவில் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் விழாவுக்கு வந்த அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கப்பட்ட பரிசுகள்

விழாவில் கலந்து கொண்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் $138,000 மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது. இவற்றில் 12 இரவுகள் பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் தான்சானியாவில் இரண்டு பேர் தங்கும் வசதி, ஹவாய் தீவில் நான்கு ஸ்டார் ஓட்டலில் ஒரு வாரம் தங்கும் வசதி, கிரீஸ் நாட்டின் ஆடம்பர வில்லாவில் தங்கும் வசதி வைர நெக்லஸ் என பரிசுகள் வழங்கப்பட்டன.

இவை போக ஐபோனுக்கு பயன்படுத்தப்படும் 3D சவுண்ட் ஸ்பீக்கர், ஏராளமான விலையுயர்ந்த மேக்கப் மற்றும் அழகு சாதன பொருட்கள், வோட்கா, ஜின் போன்ற பானங்களுடன் கூடிய காக்டெயில் பார்ட்டி, நகைகள் என பரிசுமழையை குவித்துவிட்டனர் ஸ்பான்சர்கள். அதுமட்டுமின்றி நட்சத்திரங்களுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெப்பர் ஸ்ப்ரேயும் அளிக்கப்பட்டது. ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களால் நட்சத்திரங்களின் முகங்கள் ஜொலித்தன என்பதை சொல்லவே தேவையில்லை.

More News

திருத்திக்கொள்க, இல்லையேல்...ஊடகங்களுக்கு கமல் எச்சரிக்கை

ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க. இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்'

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவசர செய்தி

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில் அன்று முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை

அனல் பறந்த ரஜினியின் முதல் அரசியல் பேச்சு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்து சுமார் 45 நிமிடங்கள் பேசினார்

ஆன்மீக அரசியல் என்ன என்று இனிமேல் பார்ப்பீர்கள்: ரஜினிகாந்த் ஆவேச பேச்சு

உண்மையான, நேர்மையான, ஜாதிமதமற்ற, அறவழியில் நடப்பதுதான் ஆன்மீக அரசியல். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மையான அரசியல். இறை நம்பிக்கை இருப்பதுதான் ஆன்மீக அரசியல்.

நீட் டாக்டர் அனிதா கேரக்டரில் நடிப்பது யார் தெரியுமா?

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கிவிட்டது.