நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை: விஷால் குறிப்பிடும் ஜனநாயக கேலிக்கூத்து

  • IndiaGlitz, [Friday,December 08 2017]

ஆர்.கே.நகர் தொகுதியில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்க கூறப்பட்ட காரணம், அவரை முன்மொழிந்த இருவர் தாங்கள் விஷாலின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என்று கூறியதுதான் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் அதிகாரி முன் அவரை முன்மொழிந்த நபர் கூறிய வாக்குமூலத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த நபர், 'நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை' என்று கூறியுள்ளார். தேர்தல் அதிகாரி முன் 'நான் கையெழுத்தே போடவில்லை அது போலியான கையெழுத்து என்று தான் அந்த நபர் மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும், ஆனால் அந்த நபர் நான் போட்ட கையெழுத்து என்னுடையது இல்லை' என்று கூறுவது காமெடியின் உச்சகட்டமாக கருதப்படுகிறது.

இதுகுறித்து விஷால் மேலும் கூறியபோது, 'ஜனநாயகத்தின் கேலிக்கு மற்றொரு உதாரணம் இங்கே !!! என்று குறிப்பிட்டுள்ளார்.