எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஓபிஎஸ் மறுத்தது ஏன்? உண்மையை உடைக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,May 12 2021]

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி 75 இடங்களில் வெற்றிப்பெற்று தோல்வியைத் தழுவியது. இதையடுத்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பு வகிப்பது என்ற குழப்பம் அந்தக் கட்சிக்குள்ளேயே வெடிக்கத் துவங்கியது. காரணம் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ் இருந்து வருகிறார். இபிஎஸ் தமிழகத்தின் முதல்வராக மூன்றரை ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். இந்த அடிப்படையில் இருவரும் முக்கியத்துவம் பெற்றவர்களாக உள்ள நிலையில் யாருக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு என்ற குழப்பம் கடந்த சில தினங்களாகவே இருந்து வந்தது.

இதையடுத்து கடந்த வெள்ளிக் கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வெற்றிப்பெற்ற எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சமாதியில் இருகட்சி நிர்வாகிகளும் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குழப்பம் மேலும் வெடிக்க, கடந்த திங்கள் கிழமை மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அதிமுக தலைவர் மற்றும் முன்னாள் சபாநாயகர் தனபாலு பெயர் பரிந்துரைக்கப் பட்டதாகவும் ஆனால் இதற்கு இபிஎஸ் ஒப்புக்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது. இறுதியாக தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பு ஒபிஎஸ்க்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அந்தப் பொறுப்புக்கு தனபாலுவின் பெயரை பரிந்துரைத்து விட்டு ஒபிஎஸ் இடத்தை காலி செய்தார் எனக் கூறப்படுகிறது.

இதனால் தமிழகத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பை ஒபிஎஸ் ஏன் மறுத்தார்? எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு அவரிடம் இருந்து தட்டிப் பறிக்கப்பட்டதா? அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் என்னதான் நடந்து போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தேனி கண்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.