தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நடிகை, பாடலாசிரியர் ஒருவருக்கு ஆளுமை விருது!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஹேமமாலினி. இவர் நடிகை என்பதைத்தவிர இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நடனக்லைஞர், அரசியல்வாதி எனப் பன்முக அடையாளங்களை கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ஹேமமாலினி மற்றும் திரைப்பட பாடலாசிரியரான பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் ஆளுமை விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் அறிவித்து இருக்கிறார். கோவாவில் நடைபெறவுள்ள 52 ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 16, 1948-இல் பிரபல தயாரிப்பாளர் வி.எஸ்.சக்கரவர்த்தி மற்றும் ஜெயா லட்சுமிக்கு 3 ஆவது மகளாக பிறந்தவர்தான் நடிகை ஹேமமாலினி. இவர் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கடந்த 1961 இல் “இது சத்தியம்“ எனும் தமிழ் திரைப்படத்தின் சில காட்சிகளில் நடித்திருந்தார். பின்னர் கல்லூரி படிப்பை தொடர்ந்த இவர் கடந்த 1970 தர்மேந்திரா படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். பல வெற்றிப்படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாக வளர்ந்த இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு தர்மேந்திராவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.
திரைத்துறையில் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர் எனப்பல பரிமாணங்களில் பணியாற்றிய இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவரைத்தவிர பாடலாசிரியரும் மத்திய திரைப்பட சான்றளிப்பு குழுவின் தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் “ஆளுமை விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 17 வயதில் தனது முதல் புத்தகத்தை வெளியிட்ட ஜோஷி, திரைத்துறையில் எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பல்வேறு பரிமாணங்களில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகிய இருவருக்கும் “ஆளுமை விருது” அறிவிக்கப்பட்டு இருப்பதையடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments