நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு குவியும் உதவிக்கரம்

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

தமிழக மாணவர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே ராஜஸ்தான் உள்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மையங்களை சி.பி.எஸ்.இ. அமைத்து பழிவாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் வெளிமாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பலர் உதவிக்கரங்களை குவித்து வருகின்றனர். 

நடிகர் பிரசன்னா நீட்  தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும், அரசுப்பள்ளியில் படித்த ஏழை மாணவர்களின் போக்குவரத்து செலவை ஏற்க தயார் என்று தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதேபோல் வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் 20 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக நடிகர் அருள்நிதி அறிவித்துள்ளார். 

மேலும் நீட் தேர்வுக்காக கேரளா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயார் என்றும், கேரளாவில் உள்ள 10 மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் தங்கும் வசதி, தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர் மற்றும் உடன் செல்லும் ஒருவருக்கு இலவச ரயில் அல்லது பேருந்து டிக்கெட் கொடுப்பதோடு, ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்றும், இந்த பணத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

More News

ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது

ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது.

அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே.

கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.