சினேகன் மனைவி கன்னிகாவுக்கு கிடைத்த வித்தியாசமான திருமண பரிசு!

பாடலாசிரியர் சினேகனுக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தின்போது கன்னிகாவுக்கு வித்தியாசமான பரிசு கிடைத்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா ரவி திருமணம் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன், பாரதிராஜா உள்பட பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கன்னிகா ரவிக்கு அவர் நடித்து வரும் படக்குழுவினர் ஒரு வித்தியாசமான பரிசு கொடுத்துள்ளனர். அந்த பரிசு என்னவென்றால் அவர் நடித்து வரும் ’ஹெல்ப் மீ’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையே படக்குழுவினர் திருமண பரிசாக அளித்துள்ளனர். திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதிகள் இந்த போஸ்டரை திருமண மேடையிலேயே வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசு நிச்சயம் கன்னிகா ரவிக்கு மறக்க முடியாத ஒரு பரிசாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

’ஹெல்ப் மீ’ திரைப்படத்தை ஷங்கர் வுட்டி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், சம்பத்ராம் என்பவர் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும், சூர்யா என்பவர் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாடலாசிரியர் சினேகன் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் ’ஆனந்தம் விளையாடும் வீடு’ மற்றும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் என நடிகராக பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.