தஞ்சை பெரிய கோவில் விவகாரம்: ஜோதிகாவுக்கு ராஜராஜசோழன் வாரிசு எழுதிய கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஜோதிகா கலந்து கொண்ட் ஒரு நிகழ்ச்சியில் அவர் என்ன பேசினார் என்பதையே புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொள்ளாதவாறு நடித்து அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கோவில்களுக்கு செலவு செய்ய வேண்டாம் என்று அவர் எந்த கட்டத்திலும் கூறவில்லை. கோவில்களுக்கு செலவு செய்வதை போல் பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செலவு செய்யுங்கள் என்று தான் கூறினார்.
இந்த நிலையில் ஜோதிகாவின் பேச்சு குறித்து கடிதம் எழுதியுள்ள இராஜ ராஜ சோழன் குடும்ப வாரிசு இரா.அழகர் அவர்கள் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அதில் "திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களுக்கு..! தாங்கள் விஜய் டிவி விருது விழாவில்,தஞ்சை பெரிய கோவிலை பற்றியும்,அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும்,கல்வியின் தரம் குறைவு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள்.. கோவில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்.. உண்டியலில் ஏன் பணம் போடுகிறீர்கள்..? அதை மருத்துவத்துக்கும் கல்விக்கும் செலவிடலாமே என ஆதங்கத்தோடு ஆலோசனை கூறி உங்களை ஒரு பகுத்தறிவுவாதியாக அடையாளப் படுத்தி பெருமை கொண்டீர்கள்.. நல்லது.. நீங்கள் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.. மார்க்க வழிபாடு கொள்பவர்.. பிறர் மதங்களை பற்றி பேசும் போது, அதன் பெருமைகள் என்ன, தொன்மை வரலாறென்ன என்பதை பற்றி அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். எங்களின் சோழப்பேரரசு எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி உலகோர் போற்றும் இராஜராஜ சோழனின் தலைமையிலும், அவன் வழி வந்து கீழ்திசை நாடுகளை கடல்கடந்து படை நடத்தி வென்றெடுத்த இராஜேந்திர சோழனாலும் உருவானது.
சிற்பக்கலை, ஆன்மீகம், ஓவியம், நாட்டியம் இவைகளை வளர்த்தது போல என் பாட்டன் ராஜராஜன் தமிழ் குலத்தின் பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக குடவோலை(தேர்தல்), மெய்கீர்த்தி(டைரி) முறைகளை ஏற்படுத்திய மனித நேயம் மிக்கவன்.. தமிழரின் வாழ்விற்கு இழுக்கு நேரிட்ட போதெல்லாம், தன் வாளின் துணையால் பகை வென்று வீரத்தை நாட்டியவன். தனது அரசில் பெண்களை அதிகாரிச்சிகளாக நியமித்து பெண்ணுரிமை காத்தவன்.. சிவப்பற்று காரணமாக மாபெரும் தட்சிணமேருவை எழுப்பி ஆன்மீகம் வளர்த்தவன்.
புலி எவ்வழியோ, அவ்வழியே புலியேறென இராஜேந்திர சோழனாலும் ஆன்மீகம், வீரம், கொடை ஆகியவற்றை சோழர்கள் வளர்த்தனர்.. இராஜராஜன் தமக்கையோ பெரிய குந்தவை பிராட்டியார்.. நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி வேண்டி நாடெங்கும் தன் சொந்த செலவில் பல ஆதூரச்சாலைகளை நிறுவி மருத்துவம் வளர்த்தவர்.. பல அரிய மூலிகைகளை வளர்க்கவென்றே அரசு பணியாளர்களை நியமனம் செய்தவர்.. மக்களின் கல்வியறிவை வளர்க்க, பல கடிகைகளை தேசத்தில் அமைத்தவர்.. இன்றிருக்கும் தஞ்சை அரசு மருத்துமனையின் பெயர் குந்தவை அரசு மருத்துவமனை என்றேயிருப்பதற்கு அவர்களின் கடமையுணர்வும், அர்ப்பணிப்புமே காரணம்..! இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, சரித்திரம் படித்தோ தெரிந்து கொள்ளுங்கள்.
போகிற போக்கில் புழுதியை வாரி இறைக்காதீர்கள்... மனிதர்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள், நோய்வாய் பட்டவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என உங்கள் மதமார்க்கம் கூறுவதை மறந்து விட்டீர்களோ... கோவில் எதற்கு, அதற்கெதற்கு இத்தனை செலவு என கேட்ட நீங்கள் தன் வாழ்வில் ஏழு மனைவிகளை கட்டி, நான்காம் மனைவியான மும்தாஜ்பேகத்தை மணமுடிக்க அவளின் முதல் கணவனை கொன்று, மும்தாஜை பிள்ளை பெற்று தள்ளும் இயந்திரமாக ஆக்கி, பத்து பிள்ளைகளை பெற்றெடுத்து, பதினோராவது பிரசவத்தில் மரித்துப் போன மும்தாஜூக்கு ஓர் இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் கல்லறை கட்டி, அதை காதலின் சின்னம் தாஜ்மஹால் என்று கூறி இன்றளவும் அதற்கு, அந்த கல்லறைக்கு ஆண்டுதோறும் பலகோடிகள் செலவு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை.
சரி.. காதலுக்கா வாழ்ந்த காவிய நாயகி அவள் என்றால், அவள் இறப்பிற்கு பின் அவளது தங்கையை மணந்த ஷாஜஹானை பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.. அவளுக்குப் பின்னும் மூன்று மனைவிகளை மணந்தது தான் காதலின் புனிதமோ... அல்லது தனது முதல் மனைவிக்கு பிறந்த தனது மகளுடனேயே உறவு கொண்ட அந்த உறவு முறைக்கும், அதற்கு இன்றளவு நீங்கள் பூசிமெழுகும் மார்க்க சிந்தனை வழிகளையும் பற்றி என்றாவது நீங்கள் குறை கூறியது உண்டா..!? கூறினால் உங்கள் மதத்தவர் உங்களை முற்போக்குவாதி என முச்சந்தியில் நிறுத்தி கல்லெறிவர் என்பதாவது தெரியுமா.? பெண்ணியம் பற்றி எல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. அதை எங்கள் மாமன்னன் எங்களுக்கு கற்று கொடுத்துவிட்டு தான் போயிருக்கிறான். நடுவில் வந்த சில மதமாற்றிகளும், எச்சை சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளென திரியும் இனப் போராளிகளும் எங்கள் கலாச்சார, பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதால், ஒட்டு மொத்த தமிழினமும் அவ்வாறோ என நீங்கள் நினைத்தால்... அது உங்கள் பேதமைத் தனம்... எதையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம் என போகிற போக்கில் பேசாதீர்கள்.
இந்து மதத்தை பற்றி பேசுவதற்கெல்லாம் ஒரு அருகதை உண்டு.. வேண்டும்..! அது உங்களைப் போன்ற நாலாந்தர நடிகைகளுக்கோ, மதமாற்றிகளுக்கோ கிடையாது..இனிமேலாவது உங்கள் இடம் எதுவென தெரிந்து நடந்து கொள்ளுங்கள்..! சரிந்து விழுந்த மார்கெட்டை திரும்பப் பெற உளறித் திரியாதீர்கள்..! ஏனென்றால் சிவத்தை பழித்தவர்கள் சவமாகும் போது அடையும் துன்பங்கள் அளவிடவியலாதிருக்கும்.. அத்தகைய துன்பங்கள் உங்களுக்கு வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments