ஒரே நாளில் 2 போராட்டங்கள்: டிராபிக்கில் ஸ்தம்பித்தது சென்னை

  • IndiaGlitz, [Thursday,January 24 2019]

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று சென்னையின் பல பகுதிகளில் இந்த அமைப்பினர்களின் போராட்டத்தால் சென்னையின் பல பகுதிகள் டிராபிக்கால் ஸ்தம்பித்துள்ளது.

இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகை முன் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கிண்டி கவர்னர் மாளிகை பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

சென்னையில் சாதாரண நாட்களிலேயே பீக் ஹவர்களில் அதிக டிராபிக் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் உள்பட சென்னைவாசிகள் பெரும் அவதியில் சிக்கியுள்ளனர்.
 

More News

மிஷ்கின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர் என்ற பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தை அடுத்து தற்போது 'சைக்கோ' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஹன்சிகாவின் போன், டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதா?

சமூக வலைத்தளங்களில் பிரபல நட்சத்திரங்களின் கவர்ச்சி படங்கள் வெளிவருவதும், அதன் பின் இது ஹேக்கர்களின் கைவரிசை என சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள் அறிவிப்பதும் திரையுலகில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகள்

'தளபதி 63' பர்ஸ்ட்லுக் எப்போது?

'தெறி', 'மெர்சல்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

பிரதமரை பாதுகாக்கும் பணியில் சமுத்திரக்கனி

சூர்யா நடித்து வரும் 'காப்பான்' திரைப்படத்தில் பிரதமராக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார் என்பதும் அவரை பாதுகாக்கும் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்து வருவதாக

தோனி ஏன் அணிக்கு தேவை? இன்று நடந்த ஒரு அதிசயம்!

தல தோனிக்கு வயதாகிவிட்டது, அவருக்கு பதில் ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஒருதரப்பினர் கூறி வந்தாலும் அவருடைய அனுபவம்,