10 மாவட்டங்களில் கனமழை....!வானிலை ஆய்வு மையம் தகவல் ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடல்பகுதியில், ஒன்றரை கிமீ வரை நிலவுகின்ற வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில், இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுவை,காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை,நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், சுமார் 30 முதன்மை 40கிமீ வேகத்தில் இடி,காற்று மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
• ஏப்ரல் 15-இல் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், காரைக்கால், புதுவை போன்ற கடலோர மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• ஏப்ரல்-16 ஆம் தேதியில் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தமிழகத்தின் தெற்குப்பகுதிகள், வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும்.
• ஏப்ரல் 17,18 தேதிகளில் தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யும், இதர மாவட்டங்களில் வறண்ட வானிலேயே காணப்படும்.
• சென்னையை பொறுத்தமட்டில், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட, ஒருசில இடங்களில் லேசான மழைபெய்யும்.
• நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11செமீ, சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8 செமீ மழை பெய்துள்ளது.
• திருவண்ணாமலையில் ஆரணி, கோவையில் சோலையார்-ல் 5 செமீ மழை பெய்துள்ளது.
• ராமநாதபுரத்தில் வாலிநோக்கம், நீலகிரியில் கொடநாடு உள்ளிட்டவற்றில் தலா 4செமீ மழை பெய்துள்ளது.
• தூத்துக்குடியில் கயத்தாறு பகுதியிலும், சேலத்தில் மேட்டூரிலும், கன்னியாகுமரியில் பெருஞ்சாணி அணையிலும், தூத்துக்குடியில் கயத்தாரிலும், சேலத்தில் மேட்டூரிலும், திருச்சியில் தாத்தையங்கார்பேட்டை பகுதியிலும், கோவையில் சின்னக்கல்லார், ராமநாதபுரத்தில் தொண்டி, கன்னியாகுமரியில் குழித்துறை பகுதியிலும் சுமார் 3 செமீ மழை பெய்துள்ளது.
• இந்த அளவீடானது கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments