கனமழை எதிரொலி: பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 04 2018]

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முடிவு செய்து கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு செய்துள்ளார். மேலும் திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அம்மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று இரவு பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக ஈ.சி.ஆர். சாலை, பெசன்ட் நகர், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை, அண்ணா நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இருப்பினும் சென்னையில் பள்ளி விடுமுறை குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் நடிக்கிற வேலையை மட்டும் பார்க்கட்டும்: தமிழக அமைச்சர்

தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது தெரிந்ததே.

'சர்கார்' விழாவை ஏன் தொகுத்து வழங்கவில்லை: பிரபல தொகுப்பாளினி தகவல்

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடிகர் பிரசன்னாவும், தியாவும் தொகுத்து வழங்கினர். இருவருமே இந்த விழாவை நன்றாக தொகுத்து வழங்கினார்கள்.

தமிழக அரசியல்வாதிகளை கலாய்த்த 'நோட்டா' நடிகர்

'அர்ஜூன் ரெட்டி' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த 'நோட்டா' திரைப்படம் வரும் 5ஆம் தேதி வெளியாகின்றது.

ஊட்டி அருகே மாயமான 7 பேர் கதி என்ன? மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு

ஊட்டி அருகே சுற்றுலா சென்ற 7 பேர் திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஆசிரியரை தத்தெடுத்த பிரபல நடிகர்

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமின்றி