தமிழகத்திற்கு வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த தேதி
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் கடந்த மாதம் வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்த நிலையில் அங்கு வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளம் ஏற்பட்டு கடவுளின் தேசம் என்று கூறப்படும் அம்மாநிலமே சிறுசிறு தீவுகளாக மாறியது.
இந்த நிலையில் இதேபோல் தற்போது வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இம்மாதம் அதாவது அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் 25 செ.மீக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் அக்டோபர் 7ஆம் தேதி அதிகனமழையை எதிர்கொள்ள தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மிக அதிக கனமழையால் சென்னை போன்ற நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout