நாளை முதல் கொட்டப்போகுது கனமழை.. சென்னை மக்களே உஷார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளை முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாகவும் இதனை அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மிதமான மழையும் நாளை கனமழையும் வரும் 11ஆம் தேதி முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர் உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மேற்கண்ட மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout