சென்னையில் 2015ஆம் ஆண்டு மழையை விட 10 மடங்கு மழை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,July 01 2020]
சென்னை மக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மறந்திருக்க மாட்டார்கள். சென்னையே வெள்ளத்தில் மிதந்தது என்பதும் சென்னையில் மக்கள் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும், மின்சாரம் உள்பட எந்தவித வசதியும் இல்லாமல் சென்னை மக்கள் தவித்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட சென்னையில் பத்து மடங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வு ஒன்றில் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி சென்னை உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்களில் ஏற்படும் பருவ மாற்றம் குறித்தும், அதனால் ஏற்படும் மழையின் தாக்கம் குறித்தும் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது
இந்த ஆய்வின் முடிவில் சென்னை உள்பட இந்தியாவில் ஒரு சில நகரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் விட பத்து மடங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது 2015ஆம் ஆண்டு 33.32 சதவீத மழை பெய்த நிலையில் வரும் காலங்களில் 233.9 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது
ஏற்கனவே சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் சென்னையை விட்டு காலி செய்து விட்டு பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கனமழை குறித்த அச்சமும் எழுந்துள்ளதால் சென்னையின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது