சென்னைக்கு மிக மிக பலத்த மழை.. ரெட் அலர்ட்  எச்சரிக்கை.. 2015 திரும்புகிறதா?

  • IndiaGlitz, [Tuesday,December 06 2022]

சென்னையில் மிக மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டதை அடுத்து அது தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் டிசம்பர் 9ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறி உள்ளது

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் மிக மிக பலத்த மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏழு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சென்னைக்கு மிக மிக பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை நள்ளிரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு என்றும் 9ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 10ஆம் தேதி 8 மாவட்டங்களில் பலத்த மழை வாய்ப்பு என்றும் அறிவித்துள்ளது.

More News

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது திடுக்கிடும் புகார்.. காவல்துறையினர் விசாரணை

பிரபல குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்ததை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

காலையில் இருந்து என்னை சுத்தி என்னென்னமோ நடந்துகிட்டு இருக்கு: பரத்தின் 'லவ்' டீசர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பரத். தற்போது 50வது படமான 'லவ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'சர்தார்' வெற்றியை கொண்டாடிய கார்த்தி.. கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

சொந்த ஊரில் பிரமாண்டமான வீடு கட்டிய விஜய் டிவி ராமர்..

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராமர் தனது சொந்த ஊரில் புது வீடு கட்டி இருக்கும் நிலையில் இந்த வீட்டின் கிரக பிரவேசம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

மனைவியுடன் சிபிராஜ் .. வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்

நடிகர் சிபிராஜ் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.