புதிய போராட்டமா? மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

  • IndiaGlitz, [Saturday,January 28 2017]

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த வாரம் சென்னை மெரீனாவில் நடத்திய ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உலக தமிழர்களை எழுச்சி அடைய செய்தது. அதுமட்டுமின்றி இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இந்த போராட்டத்தின் முடிவில் வன்முறை ஏற்பட்டதால் இனிமேல் யாரும் மெரீனாவில் போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே மெரீனா உள்பட சென்னையின் முக்கிய இடங்களில் போராட்டம் நடத்த தடை இருப்பதால், அந்த தடையை உறுதியாக கடைபிடிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மணி நேரங்களாக மீண்டும் இளைஞர்கள் மெரீனாவில் ஒன்றுகூடி புதிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மெரீனாவில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகப்படும் வகையில் கூட்டம் கூடுவதை முன்னெச்சரிக்கையாக தடுக்கவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

மக்கள் பணத்தை கொள்ளையடிக்க உதவி செய்யுங்கள். வேட்பாளரின் நூதன கோரிக்கை

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துவிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தற்போது சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன...

சூர்யாவுக்கு பீட்டா அனுப்பிய மன்னிப்பு + அறிவுரை கடிதம்.

நடிகர் சூர்யா, தனது 'சி3' படத்தின் புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டு விஷயத்தை பயன்படுத்துகிறார் என்று பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டியதற்கு கடந்த வாரம் சூர்யா, வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் பீட்டா அமைப்பை சேர்ந்தவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்...

'சற்று முன் ஓபிஎஸ் மரணம்'. சட்டசபையில் முதல்வர் காட்டிய அதிர்ச்சி ஆதாரம்.

மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்ததால்தான் வன்முறை வெடித்தது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் ஒருசில ஆதாரங்களுடன் விளக்கம் அளித்து வரும் நிலையில் இன்னொரு அதிர்ச்சி தரும் பேனரின் புகைப்படத்தையும் காட்டியுள்ளார்...

லண்டனில் ஆரம்பமாகும் நயன்தாரா படம்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'டோரா' திரைப்படம் வரும் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் நயன்தாரா  நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

250 வழக்குகள். 28 வயது இளம்பெண்ணை தேடும் பல மாநில போலீசார். எதற்காக?

28 வயது இளம்பெண் ஒருவரை அதுவும் ஒரு கையை இழந்து ஊனமுற்ற ஒரு பெண்ணை டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில போலீசார் தேடி வருகின்றனர். அந்த பெண் யார்? எதற்காக இத்தனை மாநில போலீசார் தேடுகின்றனர் என்பது தெரியுமா?