பிக் பேபியை பெற்றெடுத்த சாதனை தாய்… குவியும் வாழ்த்து!
- IndiaGlitz, [Monday,June 21 2021]
அசாம் மாநிலத்தில் இளம்பெண் ஒருவருக்கு 5.2 கிலோ கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. கொரோனா பயம் காரணமாக குறிப்பிட்ட தேதியைக் கடந்தப் பின்னரும் மருத்துவமனைக்குச் செல்லாத அந்தப் பெண்ணுக்கு மருத்துவர்கள் அக்கறையுடன் பிரசவம் பார்த்ததாக கண்கலங்கி நன்றி தெரிவித்து இருக்கிறார் குழந்தையின் தந்தை படல்தாஸ்.
அசாம் மாநிலம் சில்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயா. நிறை மாதக் கர்ப்பிணியான இவருக்கு கடந்த மே 29 ஆம் தேதி பிரசவம் ஆகிவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கொரோனா நேரத்தில் மருத்துவர்கள் என்ன சொல்வார்களோ? என அச்சத்தில் இருந்த இவர் ஜுன் மாதம் வந்த பிறகும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பயந்து கொண்டே இருந்த ஜெயா கடந்த சில தினங்களுக்கு முன்பு சதிந்திரா மோகன்லால் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் ஜெயாவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுத்துள்ளனர். மேலும் நாட்களைக் கடந்த நிலையில் பிரசவம் நடப்பதால் பல மருத்துவர்கள் இணைந்து இந்த பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அந்த பிரசவத்தில் 5.2 கிலோ எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள் அசாம் மாநிலத்தில் இதுவரை இவ்வளவு அதிக எடையுடன் குழந்தை பிறந்ததில்லை.
பொதுவா 2.5 கிலோ எடையுடன் குழந்தைகள் பிறக்கும். ஆனால் ஜெயாவிற்கு 5.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்து இருப்பது புதிய சாதனைதான் எனத் தெரிவித்து உள்ளார். இந்த நிகழ்வுகளை அடுத்து கொரோனா நேரத்தில் கர்ப்பிணிகள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லுமாறும் மாநில அரசு வலியுறுத்தி வருகிறது.