close
Choose your channels

பூமியின் சொர்க்கம்.. இதைவிட அருமையான சூரிய உதயத்தை பார்க்க முடியுமா? சமந்தாவின் வைரல் வீடியோ..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்ததாகவும் இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஈஷா தியான மையம், வேலூர் தங்க கோவில் உள்பட சில ஆன்மீக தலங்களுக்கும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா சென்று உள்ளார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக அவர் தற்போது இந்தோனேசியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அங்கிருந்து கொண்டு அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் சூரிய உதயத்தை வீடியோ எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’பூமியின் சொர்க்கம்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். உலகின் மிகச்சிறந்த சூரிய உதயங்களில் ஒன்று என்று அவர் பதிவு செய்துள்ள இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இதைவிட அருமையான சூரிய உதயத்தை பார்க்க முடியுமா? என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த ’குஷி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அதேபோல் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரும் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment