இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது 'ஹார்ட் பீட்' சீரிஸ்  !!

  • IndiaGlitz, [Friday,March 08 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'ஹார்ட் பீட்' சீரிஸை, தற்போது ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களை சுற்றி, நடக்கும் பரபரப்பு சம்பவங்கள் தான், ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம் ஆகும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், மனதைக் கவரும் இந்த சீரிஸை, மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டமாக ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

'ஏ டெலி பேக்டரி' நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது, இந்த சீரிஸை இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது “ஹார்ட் பீட்” சீரிஸை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள்.

More News

நடிகையர் திலகத்தையே மிஞ்சும் நடிப்பு.. பால் தினகரன் மனைவி வீடியோவுக்கு ஜேம்ஸ் வசந்தன் கண்டனம்..!

பால் தினகரன் மனைவி இவாஞ்சலி என்பவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மிகவும் கஷ்டத்தில் இருந்ததாகவும், கனடாவில் சொந்த வீடு வாங்க முடியாமல் ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் கர்த்தர் தான்

60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்த ரக்சிதா மகாலட்சுமி.. இன்று ரிலீஸ்..!

தொலைக்காட்சி சீரியல் நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ரக்சிதா மகாலட்சுமி, 60 வயது அரசியல்வாதிக்கு ஜோடியாக நடித்த திரைப்படம் இன்று வெளியாகிறது.

அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்தது மூளையில் அல்ல.. மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம்..!

நடிகர் அஜித்துக்கு மூளையில் அறுவை கிச்சை நடந்ததாக நேற்று இரவு முதல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அந்த செய்தியை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்கள் மறுத்துள்ளார்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் அம்பானி வீட்டு திருமணத்தில் நடனமாட மாட்டேன்: 'சந்திரமுகி 2' நடிகை..!

சமீபத்தில் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய நிலையில்

குடிதண்ணீரை வீணாக்கினால் ரூ.5000 அபராதம்.. கோடை தொடங்கும் முன்பே தலைவிரித்தாடும் பஞ்சம்..!

கர்நாடக மாநிலத்தில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுவதாகவும் இந்த நிலையில் குடிதண்ணீரை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தினால் அல்லது வீணாக்கினால்