இன்றுடன் முடிவடைந்த 'ஹார்ட்பீட்' வெப் தொடர்.. ஆனால் உடனே வெளியான நல்ல செய்தி..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

ஹாட் ஸ்டாரில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த ’ஹார்ட் பீட்’ என்ற வெப் தொட இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்னொரு நல்ல செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாட் ஸ்டாரில் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ’ஹார்ட் பீட்’ என்ற வெப் தொடர் விறுவிறுப்பாக சென்றது என்பதும் ஒரு மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களை வைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை காரணமாக இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாரமும் நான்கு எபிசோடுகள் வெளியாகி வந்த நிலையில் இதுவரை 100 எபிசோடுகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்றுடன் இந்த தொடர் முடிவடைகிறது.

இந்த தொடரில் ரீனா, ரதி, அர்ஜுன், மதன், தேஜு, அருணா, நவீன், ராக்கி, சினிமா டாக்டர் உள்ளிட்ட முக்கிய கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது என்பதும் அனைத்து கேரக்டர்களில் நடித்தவர்கள், பார்வையாளர்கள் மனதில் பதியும் வகையில் சூப்பரான நடிப்பை வெளியிட்டு இருந்தார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்றுடன் இந்த வெப் தொடர் முடிவடைந்து உள்ள நிலையில் அடுத்த கட்டமாக இரண்டாம் சீசன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தொடரின் இரண்டாம் சீசன் 2025ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் என்று தொடர் குழுவினர் அறிவித்துள்ளதால், ’ஹார்ட் பீட்’ ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.