திடீர் நெஞ்சுவலியால் கீழே விழுந்த டிரைவர்: டிரைவர் இல்லாமல் ஓடிய ஆட்டோவால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,March 14 2020]

சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்தார். இதனை அடுத்து டிரைவரே இல்லாமல் ஆட்டோ சில அடி தூரம் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே ஆட்டோ டிரைவரான பிரகாஷ் என்பவர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஆட்டோவில் இருந்து கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து டிரைவர் உள்பட யாரும் இல்லாத ஆட்டோ சில அடி தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் கவனத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து ஆட்டோ டிரைவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சென்னையின் முக்கிய பகுதியில் டிரைவர் இல்லாமல் ஆட்டோ சில அடி தூரம் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்ட இளமதி காவல்நிலையத்தில் ஆஜர்

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி என்ற இளம் பெண் திருமணமான சில நிமிடங்களில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இளமதி மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா கண்காணிப்பில் இருந்த 5 பேர் தப்பி ஓடியதால் பரபரப்பு

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் திடீரென தப்பிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இதுவரை கொரோனா!!! 

கொரோனா நோய் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி  வுஹான் மாகாணத்தில் இருந்து பரவியது.

கொரோனா பெயரை சொல்லி பேருந்து டிரைவரை பயமுறுத்திய கல்லூரி மாணவி: சென்னையில் பரபரப்பு

பேருந்து டிரைவரிடம் உடனடியாக பேருந்து நிறுத்தும்படியும், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கூறி பயமுறுத்திய கல்லூரி மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கொரோனாவால் பலியான இரண்டாவது இந்தியர்: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் பரவியது வருவது மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.