உலகம் முழுவதும் ஆபத்தில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள்!!! WHO விதிமுறைகள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு மத்தியில் கடுமையான பாதிப்புகளை உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அனுபவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இந்நிலைமை வளர்ச்சியடைந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே தலைக்காட்டத் தொடங்கியுள்ளது. பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் மறுபயன்பாடு செய்வது பற்றியும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கிவருகிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது சுகாதாரப் பணியாளர்கள் அணியும் முழுநீள நீர்ப்புகா ஆடைகளுக்கு விலக்கு அளிப்பதும் குறித்து பிரிட்டன் அரசு சிந்தித்து வருவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. இத்தகைய நிலைமை சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும் நல்லதல்ல எனத் தற்போது வருத்தம் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின் படி, சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவ முகமூடிகளைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவ முகமூடிகள் சற்றுத் தளர்வாக இருப்பதால் நீர்த்துளிகள் மற்றும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் செல்வதற்கான வாய்ப்புண்டு எனவும் விமர்சிக்கப்படுகிறது. எனவே சுகாதாரப் பணியாளர்களுக்கு N95 சுவாசக் கருவிகளை வழங்குவதே சிறந்தது எனவும் கூறப்படுகிறது. பாலியஸ்டர் மூலம் தயாரிக்கப்படும் N95 சுவாசக் கருவிகள் காற்றின் மூலம் பரவும் சிறிய துகள்களைக்கூட வடிகட்டும் திறனுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சுவாச கோளாறு மற்றும் இருதய நோய்யுள்ளவர்கள், N95 முகமூடியை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பொதுமக்களைவிட சுகாதாரப் பணியாளர்களுக்கு N95 சுவாசக் கருவிகளை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
Gowns – கவுன் போன்ற பாதுகாப்பு உடைகள் சுகாதாரப் பணியாளர்களின் கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எனக் கருதப்பட்டாலும் அவை பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. WHO வின் கூற்றுப்படி சுகாதார வல்லுநர்கள் முதற்கொண்டு அனைத்து பணியாளர்களும் “சுத்தமான மலட்டுத்தன்மையற்ற நீண்ட கைவைத்த கவுன் அணிந்திருக்க வேண்டும். மேலும் கவுன் உறைகளின் மீது போடப்படும் கவசங்கள் அல்லது பூஸ்ட்களைப் பற்றி எதுவும் வலியுறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கவசங்கள் வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், சுகாதாரப்பணியாளர்களுக்கு கையுறைகளை அணிவது பற்றியும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியான முறையில் அகற்றவும் வலியுறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout