அடுத்த 10 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சுனாமி போல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் நேற்று மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்க்ள் என்பதும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ’தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் அடுத்த பத்து நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பாதித்த அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்றும் 30% நோயாளிகளுக்கு மட்டுமே அந்த மருந்து தேவைப்படும் என்றும், தேவை இல்லாமல் தனியார் மருத்துவமனையை அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments