அடுத்த 10 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சுனாமி போல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் நேற்று மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்க்ள் என்பதும் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் ’தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் அடுத்த பத்து நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பாதித்த அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்றும் 30% நோயாளிகளுக்கு மட்டுமே அந்த மருந்து தேவைப்படும் என்றும், தேவை இல்லாமல் தனியார் மருத்துவமனையை அனைத்து நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் திரையுலகிற்கு கடந்த சில மாதங்களாகவே சோதனையான காலமாக உள்ளது. எஸ்பிபி, விவேக் உட்பட பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மறைந்து வரும் நிலையில்

தடுப்பூசி போட 69 வயது மனைவியை தூக்கி சென்ற 76 வயது முதியவர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சித்தார்த்தை  மிரட்டிய பாஜக....! அவரை ட்ரெண்டாக்கி ஆதரவு தரும் நெட்டிசன்கள்...!

நடிகர் சித்தார்த்தை பாஜகவினர் மிரட்டியதை தொடர்ந்து,  அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

'தளபதி 65' படத்துடன் மோதுகிறதா ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்.?

பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்

ரெம்டெசிவர் கிடைக்க காலில் விழுந்த தாய்...! உயிரை விட்ட மகன்...!

தன் மகன் உயிர்பிழைக்க வேண்டுமென மருத்துவ அதிகாரி காலில் விழுந்து அழுதுள்ளார் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.