கொரோனா சிகிச்சை- புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 90,924 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒமைக்ரான் பாதிப்பு தற்போது 4 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. அதேபோல தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் 4.5% பாதிப்புகள் அதிகரித்து இருக்கின்றன. இதனால் கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.
மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதற்காக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியச் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
எந்த வகை அறிகுறியும் இல்லாத அதேநேரம் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளாக வகைப்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு உடல் ஆக்ஸிஜன் அளவு 93% மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாயில் மட்டும் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமல் நோயாளிகள் மிதமான கொரோனா நோயாளிகளாக வகைப்படுத்தப்படுவர். இவர்களுக்கு 93% ஆக்ஸிஜன் அளவு இருக்கும். இதனால் இவர்கள் வீட்டிலேயே சிகிச்சை இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தனி அறையில் இருக்க வேண்டும். நோயாளிகள் கட்டாயம் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். 8 மணி நேரத்துக்கு ஒருமுறை முகக்கவசத்தை மாற்ற வேண்டும். பயன்படுத்திய முகக்கவசத்தை பல துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
நோயாளிகளைப் பராமரிப்பவர் தனி அறைக்குள் நுழையும்போது இருவருமே N95 முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பராமரிப்பவர் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருக்க வேண்டும்.
நோயாளிகள் தண்ணீர் மற்றும் அதிக அளவு நீர்ச்சத்து கொண்ட பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அடிக்கடி சோப்பு நீரில் கை கழுவ வேண்டும்.
நோயளிகள் பயன்படுத்திய பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. நோயாளிகள் அடிக்கடி தொடும் இடங்களைச் சுத்தப்படுத்த வேண்டும். பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்ஸிஜன் அளவையும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலையையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். இதில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவ அதிகாரியின் அனுமதிக்குப் பின்னரே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், இடைக்கால கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் மிதமான மற்றும் லேசான பாதிப்பு உள்ளவர்கள் அந்த மையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் லேசான மற்றும் மிதமான பாதிப்பு உடையவர்களுக்கு 5 நாட்களுக்கு 500 மி.கி வைட்டமின் சி மற்றும் Zinc மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் காய்ச்சல் இருந்தால் 4 நாட்களுக்கு பாரசிட்டமல் மாத்திரைகள் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நபருக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லையென்றால் அவர்களை டிச்சார்ஜ் செய்யலாம் என்றும் டிச்சார்ஜ் செய்யும்போது மீண்டும் பரிசோதனை அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல வீட்டுதனிமையில் இருப்பவர்கள் தினமும் 16 மணிநேரம் படுக்கை ஓய்வை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout