குமரியில் மூவர் உயிரிழந்தது எதனால்? சுகாதாரத்துறை விளக்கம்
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கன்னியாகுமரி கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று கன்னியாகுமரி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள 3 உயிரிழப்புகள் குறித்த விளக்கம் கீழ் வருமாறு:
1. 2 வயது ஆண் குழந்தை பிறவி எலும்பு நோய்
2. 66 வயது ஆண் நெடுநாள் சிறுநீரக நோய் காரணமாக உயிரிழப்பு
3. 24 வயது ஆண் நிமோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு.
மேற்குறிப்பிட்டுள்ளவர்களின் தொண்டை மற்றும் இரத்த மாதிரிகள் SOP-ன்படி கொரோனா வைரஸ் தொற்று நோய் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரில் யாருமே கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது