குமரியில் மூவர் உயிரிழந்தது எதனால்? சுகாதாரத்துறை விளக்கம்

கன்னியாகுமரி கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவர் உயிரிழந்தது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று கன்னியாகுமரி ஆசாரிபள்ளம்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ ஏற்பட்டுள்ள 3 உயிரிழப்புகள்‌ குறித்த விளக்கம்‌ கீழ்‌ வருமாறு:

1. 2 வயது ஆண்‌ குழந்தை பிறவி எலும்பு நோய்‌

2. 66 வயது ஆண்‌ நெடுநாள்‌ சிறுநீரக நோய்‌ காரணமாக உயிரிழப்பு

3. 24 வயது ஆண்‌ நிமோனியா தொற்றினால்‌ குருதியில்‌ ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக உயிரிழப்பு.

மேற்குறிப்பிட்டுள்ளவர்களின்‌ தொண்டை மற்றும்‌ இரத்த மாதிரிகள்‌ SOP-ன்படி கொரோனா வைரஸ்‌ தொற்று நோய்‌ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரில் யாருமே கொரோனா வைரஸால் உயிரிழக்கவில்லை என்பது தெரிய வருகிறது

More News

அமெரிக்கர்கள் நுழைய கூடாது என மெக்சிகோ போராட்டம்: தலைகீழாக மாறிய நிலை

'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்' என்று தமிழில் ஒரு பழமொழி கூறுவது உண்டு. அதைப்போல் மெக்சிகோ நாட்டவர்கள் மற்றும் மெக்சிகோ நாட்டின் வழியாக வரும்

கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்!!!  

கொரோனா Covid-19 உலகின் அனைத்து நிலைமைகளையும் கடுமையாகப் பாதித்துத் இருக்கிறது. சுற்றுச்சூழலைத் தவிர

கேரளாவில் கொரோனாவிற்கு முதல் பலி: துபாயில் இருந்து திரும்பியவர்

இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருந்த போதிலும் நேற்றுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.

ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை: திடீரென தற்கொலை செய்த சென்னை நபர்

ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் பணக்காரர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா: 40ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.