வாடாத ஒரு செடியில் இத்தனை நன்மைகளா? பிரண்டையின் மருத்துவ குணங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கீரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஏராளமாக கேட்டிருப்போம். ஆனால் பிரண்டை என்ற வாடாத கீரையைக் குறித்து நகரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் இளம் தலைமுறையினர் இந்த கீரையைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
ஆனால் வாடாத தன்மை கொண்ட இந்த பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பெரும்பாலும் கடைகளில் இதைப் பார்த்திருக்கவே முடியாது.
பிரண்டை என்பது வேலி பகுதிகளிலும் தண்ணீரே இல்லாத வறண்ட கரட்டு பகுதிகளிலும் வளரக்கூடியது. மனித நடமாட்டமே இல்லாமல் பகுதிகளில் வளரக்கூடியது என்பதால் இதன் அருமை எல்லோருக்கும் தெரிந்திருக்கவில்லை.
சாதாரண பிரண்டை, சிவப்பு உருட்டு பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம்பிரண்டை புளிப் பிரண்டை ஓலைப் பிரண்டை என்று பிரண்டையில் ஏராளமான வகைகள் உள்ளன. ஆனால் நான்கு பக்கங்களைக் கொண்ட சதுரப் பிரண்டையே பெரும்பாலான இடங்களில் வளருகிறது.
பிரண்டைடைய வஜ்ஜிரவல்லி ‘Cissus quadrangularis‘ என்ற அறிவியல் பெயரால் அறிஞர்கள் அழைக்கின்றனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே கிடைக்கும் இந்த பிரண்டையை சாப்பிடும்போது பல அரிய மருத்துவ குணங்களைப் பெற முடியும்.
வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், பசியின்மை போன்றவற்றிற்கு இந்தப் பிரண்டை பெரிய வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
வாயு பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்தப் பிரண்டை பெரிய அளவிற்கு உதவுகிறது.
மேலும் அடிபட்ட வீக்கம், சுளுக்கு பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணமாகக் கருதப்படுகிறது.
ஞாபகசக்தியைப் பெருக்கவும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியைப் போக்கவும் இது உதவி செய்கிறது.
இந்த பிரண்டையை துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும் என்று நாட்டு வைத்தியர்கள் கூறுகின்றனர்.
சுறுசுறுப்பை கொடுக்கிற ஒரு நல்ல உணவாக இது இருக்கிறது. மூளை நரம்புகளையும் பலப்படுத்துகிறது. எலும்புகளுக்கு புது தெம்பை கொடுக்கிறது.
வாய் துர்நாற்றத்தச் சரி செய்வதோடு ஈறுகளில் ரத்தம் வடிவதையும் இது போக்குகிறது.
எலும்பு இணைப்பு பகுதிகளிலுள்ள நரம்பு முடிச்சுகளில் வாயு சீற்றம் ஏற்பட்டு சிலருக்கு தேவையற்ற நீர் கோர்வையை ஏற்படுத்தும். இதனால் உடலில் ஆங்காங்கே பிடிப்புகள் உருவாகி, சுளுக்கு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தேவையற்ற நீர் கோர்வையை பிரண்டை எளிதாகப் போக்கிவிடும்
தேவையற்ற மன அழுத்தத்தைப் போக்கும் சக்தியும் இந்தப் பிரண்டையிடம் காணப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அஜீரணக் கோளாறை போக்கி சீரான உணவு செரிமானத்திற்கு இது உதவிசெய்கிறது.
மூல நோய் உள்ளவர்களுக்கும் இந்த பிரண்டை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். பிரண்டையை துவையலாகவோ அல்லது பிரண்டை உப்பாக தொடர்ந்து சாப்பிட்டு வருவம்போது மூலநோய் விரைவில் குணமாகும்.
கொழுப்பு சத்து உள்ளவர்களுக்கு இரத்த குழாய்களில் கொழுப்பு படித்து இரத்த ஓட்டம் தடைபடும். அதுபோன்ற பிரச்சனையையும் இந்த பிரண்டை சரிசெய்கிறது. ஆஸ்துமா பிரச்சனையை குறைக்கவும் இந்தப் பிரண்டை உதவுகிறது.
பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால், வைட்டமின் சி போன்ற சக்துகள் இருக்கின்றன.
இத்தனை மருத்துவக் குணங்கள் கொண்ட பிரண்டையை அதன் தண்டு பகுதியை மட்டும் எடுத்து தோல் நீக்கி, நாரை உரித்துவிட்டு நல்லெண்ணெய் போட்டு வறுத்து கூடவே புளி, உப்பு, சுவைக்காக தேங்காய் மற்றும் உளுந்து சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம். இந்தப் பிரண்டை துவையல் சுவையிலும் அசத்தலாக இருக்கும்.
தண்டுபகுதியைத் தவிர இலையிலும் துவையல் செய்து சாப்பிடலாம். பிரண்டை கிடைக்காதவர்கள் அதன் உப்பு வாங்கியும் பயன்படுத்தலாம். இயற்கையாக இருக்கும் அத்தனை மருத்துவ குணங்களும் இந்த பிரண்டை உப்பிலும் இருக்கிறது.
விலை கூடுதலாக இருக்கும் இந்தப் பிரண்டை உப்பினை ஒரு சிட்டிகை அளவிற்கும் குறைவாக எடுத்து தேனில் கலந்து உண்டுவந்தால் மேற்கண்ட மருத்துவக் குணங்களைப் பெற முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments