மாணவியை அனுப்ப மறுத்த தலைமை ஆசிரியைக்கு கத்திக்குத்து
- IndiaGlitz, [Wednesday,August 09 2017]
பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி அருகே உள்ள ஒரு பள்ளியில் உறவினர் மகளை தன்னுடன் அனுப்ப மறுத்த பள்ளி தலைமை ஆசிரியை ஒருவரை காம்பஸ் கருவியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையை அடுத்த பேராவூரணி ஒன்றியம் களத்தூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் சுந்தர் என்பவரின் அண்ணன் மகள் 2வது வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை அழைத்து செல்ல சுந்தர், தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் 2வது வகுப்பு மாணவி என்பதால் பெற்றோர் வந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்று தலைமை ஆசிரியை கறாராக கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர் உடனே தலைமை ஆசிரியை புவனேஸ்வரியை காம்பஸ் கருவியால் வயிற்றிலும் முதுகிலும் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனால் வலியால் துடித்த தலைமை ஆசிரியை புவனேஸ்வரியை அருகில் இருந்த ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செய்யப்பட்ட புகாரை அடுத்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.