39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் பெரிய குடும்பத் தலைவன் மறைந்த சோகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே மிகப்பெரிய குடும்பத்துக்குத் தலைவராக அறியப்பட்ட ஜியோனா சனா நேற்று உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து மிசோரம் மாநிலத்தின் முதல்வர் முதற்கொண்டு பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
மிசோரம் மாநிலம் பட்வாங் மலைகளுக்கு மத்தியில் வசித்து வந்தவர் ஜியோனா சனா (76). இவருக்கு 39 மனைவிகளும் 94 குழந்தைகள் உள்ளனர். மேலும் 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இத்தனைப் பேரும் 100க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட ஒரு 4 மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தனர். அதோடு தனது திருமணத்தைக் குறித்து கூறிய ஜியோனா எல்லோரும் என்னை திருமணத்திற்காக அணுகினார்கள். அதனால் யாருடைய சலுகைகளையும் மறுக்கவில்லை அனைவரும் ஒற்றுமையாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறோம் எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நிரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த ஜியோனா நேற்று திடீரென உயர் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜியோனா உயிரிழந்து விட்டார். இதனால் மிசோரம் மாநிலத்தில் உள்ள பலரும் தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜியோனா இறப்பு குறித்து பேசிய மிசோரம் மாநிலத்தின் முதல்வர் சோரம் தங்கா “உலகின் பெரிய குடும்பத்துக்கு தலைமை தாங்கிய ஜியோனா சனாவின் மரணம் மிசோரமுக்கு பேரழிப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout