ஓய்வுபெற மூன்றே நாட்கள் இருந்த நிலையில் கொரோனாவால் பலியான நர்ஸ்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Saturday,June 27 2020]
இம்மாதம் 30ஆம் தேதி அதாவது இன்னும் மூன்று நாட்களில் ஓய்வுபெற இருந்த தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் தலைமை நர்சாக பணிபுரிந்து வந்தவர் விக்டோரியா ஜெயமணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். அவருக்கு ஏற்கனவே இருதய சம்பந்தமான நோய் மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக தெரிகிறது. கொரோனாவால் பலியான தலைமை நர்ஸ் ஜெயமணி அவர்களுக்கு அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்
நர்ஸ் ஜெயமணி அவர்கள் இம்மாதம் 30ஆம் தேதி ஓய்வு பெற இருந்தார் என்றும், ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனாவால் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவருடைய உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நர்ஸ் ஜெயமணி மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு உறவினர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டதாகவும் அந்த திருமணத்தின் போதுதான் அவருக்கும் அவருடைய கணவருக்கும் கொரோனா தொற்று பரவியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது அவருடைய கணவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது