டெஸ்ட் போட்டிகளில் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடை பெறவில்லை. ஆனால் விளையாட்டைப் பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் இணையத்தில் களைக்கட்டி வருகின்றன. இதுபோன்ற விவாதங்கள் இந்திய ஊடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு விவாதத்தை விஸ்டன் இந்தியா ஊடகம் கிளப்பி விட்டு இருக்கிறது. இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கி கலக்கும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரையே ஓரம் கட்டி ராகுல் டிராவிட்டை ரசிகர்கள் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதுதான் சுவாரசியமே.
ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் சச்சின். அவர் 1989 -2013 வரை இந்தியாவிற்காக 200 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் எடுத்த ரன்கள் 15,921. இந்தப் போட்டிகளில் எடுக்கப் பட்ட அதிகப்பட்ச சதவீதம் 53.78 ஆக இருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே 106 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கெண்டு இருக்கிறார். அதில் 8,705 ரன்களைக் குவித்து இருக்கிறார். இந்தப் போட்டிகளின் சராசரி 54.74 ஆக இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் போட்டிகளில் அவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதில் 49.79 சராசரி ரன்களை குவித்து இருக்கிறார்.
இந்நிலையில் விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் சச்சினை பின்னுக்குத் தள்ளி ராகுல் டிராவிட்டை வெற்றி பெற செய்திருக்கின்றனர். இதனால் கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த இந்திய டெஸ்ட் போட்டிகளில் ஆடியே பேட்ஸ்மேன் என்ற பட்டத்தை ராகுல் டிராவிட் தட்டி சென்றிருக்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பிற்கு இந்தியாவை சார்ந்த 14 விளையாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளப் பட்டனர். அதில் ரசிகர்கள் சச்சின், ராகுல் டிராவிட், சுனில் காவஸ்கர், விராட் கோலி என 5 பேரை மட்டுமே தேர்வு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் சிறந்த வீரராக ராகுல் டிராவிட்டை தேர்வு செய்திருக்கின்றனர்.
ராகுல் டிராவிட் கடந்த 1996 – 2012 வரை 164 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் 13,288 ரன்களை எடுத்து இருக்கிறார். அதன் சராசரி 52.31 ஆக இருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே 94 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்டார். எடுத்த ரன்கள் 7,690. அதைத்தவிர தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்தின் 64 போட்டிகளில் கலந்து கொண்டார். அதில் 5,443 ரன்களை எடுத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகள் என்றாலே ராகுல் டிராவிட்டுக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டாரமே இருக்கிறது. அந்த ரசிகர்கள் தற்போது ராகுல் டிராவிட்டை கொண்டாடி வருவது விஸ்டன் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com