'அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்கு: தமிழக அமைச்சர் குறித்து ரஜினிகாந்த்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அவர் பாட்ஷா மாதிரி, அவருக்கு இன்னொரு முகம் இருக்குது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அமைச்சர் ஒருவர் குறித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாட்ஷா’ என்ற வெற்றி திரைப்படத்தில் ’என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனம் இன்றளவும் பிரபலம் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தமிழக முதல்வரின் புகைப்பட கண்காட்சியை ரஜினிகாந்த் பார்வையிட்டார். அவருடன் தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் உடன் இருந்தார்.
இந்த நிலையில் ’எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’சேகர் பாபு பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ரொம்ப விசுவாசமானவர், ரொம்ப அன்பானவர், அவருக்கு இன்னொரு முகம் இருக்கு, பாட்ஷா மாதிரி’ என்று தெரிவித்தார்.
மேலும் முதல்வரின் புகைப்படங்களை பார்க்க வரவேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது, அப்போது ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கண்டிப்பாக நான் வருகிறேன் என்று கூறியிருந்தேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் மதிப்புக்குரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 54 வருடம் அவர் உழைத்து, படிப்படியாக முன்னேறி பல தடைகளை சந்தித்து தற்போது அவர் முதலமைச்சர் ஆக இருக்கிறார் என்றால் மக்கள் அவருடைய உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம், அவர் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாட்டமாக, ‘எங்கள் முதல்வர், எங்கள் பெருமை’ என்ற புகைப்படக் கண்காட்சி சென்னையில் நடந்து வருகிறது. இன்று ரஜினிகாந்த், யோகி பாபு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். #MKStalin #Rajinikanth𓃵 @iYogiBabu pic.twitter.com/p82O9o77lE
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) March 11, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments