'மனுஷன் அங்க நிக்கிறாய்யா' மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபல சமையற்கலைஞர் வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

பிரபல சமையற் கலைஞரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத் தலைவரும், குக் வித் கோமாளி சீசன் 5ன் ஜட்ஜ்யும், மெஹந்தி சர்கஸ், Penguin ஆகிய இரு படங்களில் நடித்துள்ள நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பிரபல சமையற் கலைஞர் வெங்கடேஷ் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

அவர் பேசியதாவது: -

எனக்கு கோவை மக்களை மிகவும் பிடிக்கும். சிறு குழந்தைகளையும் வாங்க போங்க னு மரியாதையா கூப்பிடுவாங்க. செட்ல ரொம்ப தன்மையா பேசுவாரு.

சீசன் 4 வரை நான் ஒரு இமேஜை நான் உருவாக்கி வச்சிட்டேன். ஆனால், அதையெல்லாம் கடந்து அவர் தனக்குனு ஒரு இடத்தை பிடிச்சிருக்காரு. நான் அவரை ரொம்ப மதிக்கிறேன்.

அவர் அப்பாவிடம் இருந்து தொழிலை ஏற்றுக்கொண்டு, ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை பார்த்துக்கொண்டிருப்பவர். அவர் திறமைக்கு எனது வாழ்த்துக்கள்.

அவர் கிட்ட விலையுயர்ந்த கார்களானா Jaguar, Hammer இருக்கு, ஹெலிகாப்டர் வாங்கணும் னு சொன்னார். 10 மாடி கட்டிடம் கட்டி கார்பொரேட் அலுவலகம் அமைக்கணும் னு சொன்னார். கடைசியா ஒரு வரி சொன்னார் பாருங்க....

எவ்ளோ பேருக்கு வேலை குடுக்க முடியுதோ,அவ்ளோ பேருக்கும் வேலை குடுக்கனும் னு சொன்னார். மனுஷன் அங்க நிக்கிறாய்யா........

என பேட்டியின் இந்த பகுதியில் பேசியுள்ளார்.