திலீப் ஜாமீன் மனு: கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல மலையாள நடிகை ஒருவர் ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் தென்னிந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கனவே அங்கமாலி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் கேரள ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக கேரள ஐகோர்ட்டில் திலீப் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுமீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று அந்த மனுவும் அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 50 நாட்களுக்கும் மேல் அவர் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் திலீப்பின் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததை அடுத்து வீடியோ கான்பிரன்ஸ் முலம் விசாரணை செய்த நீதிபதி, திலீப்பின் காவலை செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

More News

புரட்சி தளபதி விஷாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர், தயாரிப்பாளர், சமூக சேவகர், என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம், புரட்சி தளபதி விஷால் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்.

நேற்று சிங்கிள் டிராக், இன்று லிரிக் வீடியோ: வேகம் எடுக்கும் வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் வெளியிட படக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...

இன்று மாலை விஜய் ரசிகர்களுக்கு 'மெர்சல்' விருந்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனாண்டாள் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது...

சிம்பு, தனுஷை அடுத்து விஷாலுக்கு கிடைத்த ஆன்ந்தம்

சிம்புவின் லவ் ஆன்ந்தம், தனுஷின் சச்சின் ஆன்ந்தம் ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து ஹிட்டாகியுள்ள நிலையில் இன்று விஷால் பிறந்த நாளை முன்னிட்டு விஷால் ஆன்ந்தம் வெளியாகியுள்ளது...

அதிமுக பொதுக்குழு கூடும் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

சமீபத்தில் அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது. தினகரன் அணியினர் எந்த நேரமும் ஆட்சியை கவிழ்க்கலாம் என்ற நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்தும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க விரைவில் கட்சியின் பொதுக்குழு கூடவுள்ளதாக கூறப்பட்டது.