மாற்றுத்திறனாளிக்கு பரிவோடு உதவிய காவலர்… சல்யூட் வைக்கும் நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காவலர்கள் என்றாலே கண்டிப்புடன் பணியாற்றக் கூடியவர்கள் என்றுதான் நம்முடைய புரிதல் இருந்துவருகிறது. இந்நிலையில் கண்டிப்பிலும் தாய்மை மிக்க அன்பும் அவர்களிடம் நிறைந்திருக்கிறது எனக் காட்டியிருக்கிறார் மும்பையைச் சார்ந்த ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி. இவரது வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
மும்பையின் சத்திரபதி சிவாஜி மஹாராஜ் டொமினஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கிடையே பணிப்புரிந்து வருபவர் ராஜேந்திர சோனாவானே. இவர் தினந்தோறும் அந்தச் சாலையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகிறார். கடமைத் தவறாத இந்த காவலர் கடந்த சில தினங்களுக்கு சாலையைக் கடக்க முடியாமல் திணறிய ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்த்திருக்கிறார். உடனே அவரிடம் ஓடிய காவலர் அவரின் கையைப் பிடித்து அந்த சாலையைக் கடக்க உதவியிருக்கிறார்.
இதை அருகில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். மேலும் தலைமை காவலராக இருந்து கொண்டு அருகில் இருப்பவர்களை அதட்டாமல் தாய்மை உணர்வுடன் நடந்து கொண்டது குறித்தும் ராஜேந்திர சோனாவானாவிற்கு அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Our #MrMumbaiPolice, winning hearts across the 'universe'!
— Mumbai Police (@MumbaiPolice) December 13, 2021
HC Rajendra Sonawane spotted at CSMT road doing what we do best - lending a helping hand to those in need!#MumbaiPoliceForAll pic.twitter.com/PTbCJCQXa1
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout