டிக் டாக் செயலி மீதான தடை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

டிக் டாக் செயலியில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் ஆபாசமாகவும் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இருப்பதாலும் அந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், 'டிக்டாக்' வழக்கை 24ஆம் தேதிக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இல்லையேல் தடை ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தது

இதனையடுத்து இன்று இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை டிக் டாக் செயலியை டவுன்லோட் செய்ய விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் ஆபாச வீடியோக்கள், சமூக சீர்கேடு வீடியோக்களை பதிவிறக்கம் செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதித்ததோடு, நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிபந்தனையை டிக்டாக் தரப்பு ஏற்றுக்கொண்டது. தவறான நோக்கத்திலோ, ஆபாச வீடியோக்களோ டிக்டாக் செயலியில் பதிவு செய்யப்பட்டால் அந்த வீடியோ 15 நிமிடத்தில் நீக்கப்படும் என்றும் டிக்டாக் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது

More News

இவ்வளவு கொலையும் அந்த பொண்ணுக்காகவா? 'கொலைகாரன்' டிரைலர் விமர்சனம்

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா நடிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவான 'கொலைகாரன்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஏழை மாணவி சஹானாவின் 'கனா'வை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்!

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு வெளியான நிலையில் இந்த தேர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மரக்கூண்டில் இரண்டு குழந்தைகளை அடைத்து வைத்த இரக்கமில்லா பெற்றோர் கைது!

பெற்ற குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக வளர்க்கும் பெற்றோர்கள் மத்தியில் ஒருசில பெற்றோர்கள் பெற்ற குழந்தைகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தற்போது அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றது

ஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்!

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா? அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி

கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்றபோது நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முதலில் அனுமதிக்கப்படவில்லை.