ஊருக்குத்தான் உபதேசம்? கேப்டன் கோலியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலி சொதப்பலாக விளையாடியது குறித்து முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வருவதைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஒற்றை இலக்கத்தில் அவர் எடுத்த ரன்களைப் பார்த்து ரசிகர்களே அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தனர்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 17 பந்துகளுக்கு வெறும் 7 ரன்களே எடுத்து மீண்டும் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். இதுகுறித்து விமர்சித்துப் பேசிய முன்னாள் வீரர் மனிந்தர் சிங், “அட்வைஸ் கூறினால் மட்டுமல்ல, அதன்படி கேப்டன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்“ என்று முன்பு நடந்த ஒருவிஷயத்தைப்பற்றி குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
அதாவது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி “இங்கிலாந்து களங்களில் பழிவாங்கும் எண்ணங்களை மனதில் வைத்து கொண்டு ஆடினால் நஷ்டம்“ எனத் தெரிவித்து இருந்தார். அந்தக் கருத்து தற்போது கோலிக்கே பலித்துவிட்டது எனும் நோக்கில் மனிந்தர் சிங் கேலி செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர இங்கிலாந்தின் லீட்ஸ் ஹெட்டிங்லே பிட்ச் குறித்தும் ரசிகர்கள் சில கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த பிட்ச் நம்முடைய இந்திய பிட்சை போன்றிருக்காது. இதில் வீரர்கள் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கு முதலில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு டிரைவ் செய்தால் வேலைக்கு ஆகாது. முதலில் பிட்சை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். கோலிக்கு இது நன்றாகவே பொருந்தும் என்றும் கருத்துக் கூறி வருகின்றனர்.
அதோடு கடந்த 50 போட்டிகளில் கோலி ஒரு சதம் கூட அடிக்காததையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். விராட் கோலி கடந்த 2 வருடங்களில் 18 டெஸ்ட் போட்டிகள், 15 ஒருநாள் போட்டி, 17 டி20 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி உள்ளார். இதில் ஒருமுறைகூட 3 இலக்க ரன்களைத் தொடும் அளவிற்கு அவர் சதம் அடிக்கவில்லை.
அதோடு தற்போது 3 டெஸ்ட் தொடர் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனிடம் 7 ஆவது முறையாக கேட்ச் கொடுத்து அவுட்டாகி விட்டார். இந்தச் சறுக்கல்களைப் பட்டியலிட்ட ரசிகர்கள் இனி கேப்டன் கோலியின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com