போராட்டத்தை அடக்க ராணுவமா? சிம்புவின் வித்தியாசமான ஐடியா
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
இன்று தமிழகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் ஜல்லிக்கட்டு போராட்டத்டை ஆரம்பித்த சிறுபொறிகளில் ஒருவர் நடிகர் சிம்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஜல்லிக்கட்டுக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவரான சிம்பு நேற்று இரவு 8 மணி முதல் தனது தி.நகர் வீட்டின் முன் அறப்போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைக்கும் வரை வீட்டின் வெளியே உட்கார்ந்து தனது எதிர்ப்பை அரசுக்கு எதிராக தெரிவிக்கும் வகையில் போராடி வரும் சிம்பு நேற்று போராட்டத்தின் இடையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் வரவிருப்பதாக கூறப்படுகிறது. ராணுவம் வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. அங்கே லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடியுள்ளனர். அவர்கள் மீது முடிந்தால் கை வைத்து பார்.
மேலும் உடனடியாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் அனைவருக்கும் தேசிய கொடியை கொண்டு போய் சேர்க்க வேண்டும். தேசிய கொடியை மேலே போட்டிருந்தால் யாராவது இளைஞர்களை அடிக்க முடியுமா? அப்படியே முடிந்தால் அடித்து பார்? இதுவரை தூங்கி கொண்டிருந்தது போதும். உடனே விழித்தெழுங்கள்' என்று சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
🎙️ @iam_str talks.
— தமிழ் வாழ்க (@CinemaCalendar) January 18, 2017
Have the 🇮🇳 national flag pinned on your chest, just in case if any policemen/ army come to hit. #JallikattuProtest pic.twitter.com/MVkhES7m1L