அமிதாப் மீதும் 'மீ டூ' குற்றச்சாட்டு: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 16 2018]

இதுவரை உலகின் பல நாடுகளில் பவனி வந்த 'மீ டூ' ஹேஷ்டாக் தற்போது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மீடூவில் பல பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பெண்கள் பெரும்பாலும் பிரபலமாக இருப்பதால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் அவர்கள் இடம்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி என்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மீது 'மீடூ' குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,  அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டரில் அமிதாப் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் மீதே 'மீடூ' குற்றச்சாட்டு பதிவாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் ஷாருக்கான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே' லீ மஸ்க்' என்ற வெர்ட்சுவல் ரியாலிட்டி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் என்பதும், ஜெய்ஹோ உள்ளிட்ட பல தனிப்பாடல்கள் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே

கண்ணாமூச்சி விளையாடி கணவரை கொலை செய்த இளம்பெண்

சமீபத்தில் அனிதா என்ற இளம்பெண்ணுக்கு கதிரவன் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்பே அனிதாவுக்கு ஒரு காதலன் இருந்ததாக தெரிகிறது.

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் புற்றுநோயால் மரணம்

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் இயங்க காரணமான மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 65.

'மீ டூ' கேள்வியால் ஆத்திரமான பாரதிராஜா

உலகம் முழுவதும் கடந்த ஆண்டே 'மீ டூ' ஹேஷ்டேக் பரபரப்பை ஏற்படுத்தினாலும் தமிழகத்திற்கு 'மீ டூ'வை அறிமுகம் செய்த பெருமை பாடகி சின்மயியை சாரும். வைரமுத்து மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு

சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் ஒருசில இடங்களில் குறிப்பாக சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக