அமிதாப் மீதும் 'மீ டூ' குற்றச்சாட்டு: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை உலகின் பல நாடுகளில் பவனி வந்த 'மீ டூ' ஹேஷ்டாக் தற்போது இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழகத்திற்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மீடூவில் பல பெண்கள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். இந்த பெண்கள் பெரும்பாலும் பிரபலமாக இருப்பதால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் அவர்கள் இடம்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி என்பவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் மீது 'மீடூ' குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.
சமீபத்தில்தான் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து தனது டுவிட்டரில் அமிதாப் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவர் மீதே 'மீடூ' குற்றச்சாட்டு பதிவாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Have personally heard so many stories of Bachchan’s sexual misconduct and I I hope those women come out. His hypocrisy is sooooo tired. #Metoo #MeTooIndia https://t.co/2BpumLoYlF
— Sapna Moti Bhavnani (@sapnabhavnani) October 11, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout