இதற்குமுன் தமிழகத்தை வெட்டுக்கிளிகள் தாக்கியிருக்கிறதா??? வரலாறு என்ன சொல்கிறது???
Send us your feedback to audioarticles@vaarta.com
வெட்டுகிளிகளின் படையெடுப்பால் இந்தியா, பாகிஸ்தானை அடுத்து பங்களாதேஷ், ஈரான் எனப் பல நாடுகள் கடுமையான அழிவுகளைச் சந்திக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. தற்போது வட இந்தியாவின் ஜெய்ப்பூர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் வெட்டுகிளிகளின் படையெடுப்பால் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தென் தமிழகத்திற்கும் இந்த பாதிப்பு இருக்குமா என சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து தென் தமிழகத்தை இந்த வெட்டுகிளிகள் படையெடுப்பு தாக்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றே வேளாண் விஞ்ஞானிகள் பதில் அளித்து வருகின்றன.
இதற்குமுன் தமிழகத்தில் இப்படியொரு வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இல்லை என்று வேளாண் அதிகாரிகள் கூறிவந்தாலும் தமிழ் இலக்கியங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக தரவுகள் கிடைக்கின்றன. 1976 இல் கி. ராஜநாராயணன் எழுதி வெளியிட்ட கோபால்ல கிராமம் நாவலில் இதுபோன்ற வெட்டுகிளிகளின் படையெடுப்பு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து கி. ராஜநாராயணனிடம் தி இந்து தமிழ் நாளிதழ் விளக்கம் கேட்டு அதை செய்தியாக வெளியிடவும் செய்திருக்கிறது. தன்னடைய வாழ்நாளில் இதுபோன்ற வெட்டுகிளிகளின் படையெடுப்பை தான் பார்த்ததே இல்லை என்றும் தன்னுடைய பாட்டி அவருடைய காலத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை பார்த்ததாகவும் அது குறித்த கதைகளைத் தன்னுடைய பாட்டியிடம் இருந்து கேட்டு நாவலில் பதிவு செய்ததாகவும் கி. ராஜநாராயணன் பதிவு செய்திருக்கிறார். “மழையின்மையும் கொள்ளை நோய்களும் எப்படி அடுத்து பஞ்சத்தைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுமோ, அதுபோலவே வெட்டுக்கிளித் தாக்குதலும் பஞ்சத்தைக் கூட்டிக்கொண்டு வந்தது” என்று தன் முன்னோர் பகிர்ந்து கொண்ட அனுபவ நினைவுகளை அப்படியே கோபல்ல கிராமம் நாவலில் பதிவு செய்திருக்கிறார்.
இதேபோன்ற ஒரு வெட்டுக்கிளி தாக்குதல் மதுரையில் சொக்கநாத நாயக்கர் காலத்தில் நடைபெற்றதைப் பற்றி பிபிசி செய்தி குறிப்பு வெளியிட்டு இருக்கிறது. சு.வெங்கடேசன் எழுதி வெயிட்டுள்ள காவல் கோட்டம் நாவலில் இதுபற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. வானத்து மேகங்களைப் போன்று கூட்டம் கூட்டமாக வெட்டுகிளிகள் படையெடுத்து வந்ததாகவும் நிலத்தில் பெருமழை பெய்தது போல ஒட்டு மொத்த பச்சையையும் வாரி சுருட்டிக் கொண்டதாகவும் அவர் எழுதி இருக்கிறார். 2 நாட்கள் இருந்த இந்த வெட்டுக்கிளியின் தாக்கத்தால் ஒட்டுமொத்த மதுரையின் விளைச்சலும் காணாமல் போனதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது கற்பனையான தகவல்கள் அல்ல என்பதும் கவனிக்கத் தக்கது.
J.H. Nelson எழுதியுள்ள The Political History of Country என்ற வரலாற்று ஆவணத்தில் இந்த வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு தெளிவாகவே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திருமலை நாயக்கருக்குப் பின்பு மதுரையின் அரசராக விளங்கிய இரண்டாம் முத்து வீரப்பன் காலக்கட்டத்தின் அதாவது 1659-1682 ஆம் காலக்கட்டத்தில் மதுரையை வெட்டுக்கிளிகள் தாக்கியதாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன. இதைத்தவிர வரலாற்று ஆய்வாளர் அ.க. பெருமாள் எழுதியுள்ள பில்லுக்கட்டு நாயக்கரின் வரலாற்றில் கன்னியாக்குமரி நோக்கி படையெடுத்த வெட்டுக்கிளிகளின் தாக்கம் பற்றிய குறிப்புகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது . பில்லுக்கட்டு நாயக்கர்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலை எதிர்ப்பதற்காக தோட்டங்களில் பரண்களை அமைத்து வௌவால்களை வளர்த்தாகவும் வித்தியாசமான குறிப்பு ஒன்றும் கிடைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com