கொரோனாவில் புதிய அவதாரம் எடுத்து வரும் பேய் கிராமங்கள்!!! எங்கே தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்திரகாண்டில் ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை சந்தித்த இந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த வீடுகளில் தனித்து இருப்பதற்கான இடம் இல்லாமல் தவித்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரகாண்டில் உள்ள டேஹராடூனை அடுத்த பவுடி மாவட்டத்தில் இருக்கும் பல பேய் கிராமங்கள் தற்போது கொரோனா தனிமைப்படுத்தப் படும் மையமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
உத்திரகாண்டில் உள்ள பவுடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பின்மை, விவசாய பாதிப்பு, உள்கட்டமைப்பு வசதியின்மை போன்ற காரணங்களால் கிராமத்தை காலி செய்து வேறு இடங்களுக்குச் செல்லும் பழக்கம் சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 186 கிராம மக்கள் தங்களது சொந்த மண்ணை விட்டு விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளர். இப்படி காலியாக கிடக்கும் கிராமங்களை பொதுவாக பேய்க் கிராமங்கள் என அழைப்பது வழக்கம். பராமரிக்கப் படாமல் புதர் மண்டி கிடங்கும் கிராமங்களை பவுரி மாவட்ட நிர்வாகம் தற்போது சுத்தம் செய்து கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக மாற்றி வருகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து இதுவரை உத்திரகாண்டிற்கு 19 ஆயிரத்து 846 தொழிலாளகள் திரும்பியுள்ளனர். பவுரி மாவட்டத்திற்கு 1049 தொழிலாளர்கள் வந்திருக்கிறார்கள். பல மைல் தூரம் கடந்து வரும் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் அவர்களது சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்காமல், 14 நாட்கள் வரையிலும் இந்த பேய் கிராமங்களில் தனிமைப் படுத்தி வைக்கிறது. பவுரி மாவட்டத்தில் உள்ள பேய் கிராமங்களில் உள்ள 576 வீடுகள் கொரோனா தனிமைப் படுத்தும் மையமாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாக்கப் பட்ட வீடுகளில் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து கொடுக்கப் பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout