ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி: வெற்றிக்காக காத்திருக்கும் பட்டியல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 3 திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில வெற்றிப் படங்களையும் இந்த ஆண்டிற்குள் இந்த நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
இதில் ’டான்’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ’விக்ரம்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் வசூல் செய்து உள்ளது என்பதால் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ கார்த்தியின் ‘சர்தார்’ ஆர்யாவின் ’கேப்டன்’ மற்றும் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ ஆகிய திரைப்படங்களையும் இந்த ஆண்டு ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன’ திரைப்படத்தையும் இந்நிறுவனம் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
The force behind #RedGiantMovies that carried #FIR #KaathuvakulaRenduKaadhal #Don #NenjukuNeedhi & #Vikram to stellar success.
— Red Giant Movies (@RedGiantMovies_) June 19, 2022
Thank you, team ???? pic.twitter.com/qBagGjseuN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com